Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்”…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் பல அரசு பள்ளிகளில் போதிய அளவு ஆசிரியர் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. ‌ இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி 34 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி 7,500 திறன் வகுப்பறைகள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும். இதற்காக 150 கோடி நிதி ஒதுக்கப்படும். இதனையடுத்து சென்னையில் உலகத் தரத்திலான பள்ளிகள் அமைக்கப்படும். இதற்காக ரூபாய் 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் ருபாய் 30 கோடி செலவில் உருவாக்கப்படும். சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் உடல் நலம் காப்பதற்கான சிறப்பு பயிற்சிகளும், மாணவர்களின் மன நலனை காப்பதற்கான விழிப்புணர்வுகளும் நடைபெறும். மேலும் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 15 ஆயிரம் பணியிடங்கள் அரசு தேர்வுத்துறை மூலமாக நிரப்பப்படும். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக 9,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்தார்.

Categories

Tech |