Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

விரைவு ரயில்களில் சிறப்பு வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பயணிகளின் வசதிக்காக அனைத்து போக்குவரத்து வசதிகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் ரயில்களில் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் 300-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். இதன் காரணமாக கடந்த 12-ம் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரை முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பட்டது.

இதனால் அனைத்து பயணிகளுக்கும் பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 19, 20 மற்றும் 21-ம் தேதிகளில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் கீழ்கண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி துரந்தோ விரைவு ரயில், மதுரை – சென்ட்ரல் விரைவு ரயில், நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரயில், தாம்பரம் -நாகர்கோவில் விரைவு ரயில், காரைக்கால் – எழும்பூர் விரைவு ரயில், எழும்பூர் – காரைக்கால் விரைவு ரயில், மங்களூர் – எழும்பூர் விரைவு ரயில், ராமேஸ்வரம் – எழும்பூர் விரைவு ரயில் போன்றவைகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

Categories

Tech |