உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் தற்போதைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்வதில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதை நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 கல்லூரிகளில் பிஎச்டி படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Categories