உக்ரைன் நாட்டின் பல நகர்களை அழித்த ரஷ்ய படையினர் அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படை முற்றிலுமாக கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் கெர்சன், கார்கிவ், கீவ், போன்ற நகரங்களையும் தாக்கியது. இந்நிலையில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் போன்ற பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்யப் படை தீவிரம் காட்டி வருகிறது.
கிழக்கு பகுதிகள் இருக்கும் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் போன்ற பகுதிகளை முற்றிலுமாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரஷ்யப் படை தங்கள் ஆயுதங்களை அந்த பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து கொண்டிருப்பதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரி கூறியிருக்கிறார்.