Categories
உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: அவர் வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது…. பிரான்ஸ் பிரதமர் ஓபன் டாக்…..!!!!!!

வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்று பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல்சுற்றில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 % வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 % வாக்குகளையும் பெற்று முதல் 2 இடங்களை பிடித்தனர். இதையடுத்து தீவிர இடதுசாரி தலைவரான Jean Luc Melenchon 22 % வாக்குகளை பெற்று 3-வது இடம் பிடித்தார்.

முதல் சுற்றில் எந்தஒரு வேட்பாளரும் 50 % வாக்குகளுக்கு மேல் பெறவில்லை என்பதால், வரும் 24ஆம் தேதி 2வது சுற்று தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் முதல்சுற்றில் முதல் 2 இடங்களை பிடித்த மக்ரோன்-மரைன் லு பென் மோதுகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் பிரதமர் Jean Castex பேசியதாவது, ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இம்மானுவேல் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது.

இதற்கிடையில் போட்டி இன்னும் முடியவில்லை. ஒருவர் மக்ரோனையும், மரைன் லு பென்னையும் ஒரேமட்டத்தில் வைப்பார். ஆனால் முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன என்று Jean Castex தெரிவித்துள்ளார். வரும் 24ம் தேதி நடைபெறும் 2வது சுற்று வாக்கெடுப்பில் மக்ரோன் முன்னிலைப் பெறுவார் என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.      ,

Categories

Tech |