ஹிந்தி திரையுலகில் ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தன் தொழில் மீது உள்ள ஆர்வத்தை ஆலியா பட் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அடுத்த படம், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி விரைவில் வெளியாக உள்ளது.
அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருமணம் முடிந்த பிறகு முதன்முறையாக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே அடியெடுத்து வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது. அவர் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் என்று தெரிந்ததும் விமான நிலையத்திற்கு புகைப்படக்காரர்கள் குவிந்துவிட்டனர். ஆலியா பட் போன்றே தொழில் பக்தி கொண்ட அவரது கணவர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தனது பணி நிமித்தம் டி-சீரிஸ் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.