தமிழ் படங்களை தாழ்த்திப் பேச வேண்டாம் என பிரபல இயக்குனர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் பேரரசு சிவகாசி, திருப்பாச்சி போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது கன்னட படம் வெளியாகி வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அந்தப் படத்தை ஒப்பிட்டு தமிழ் படங்களை இழிவு படுத்துவது சரியல்ல. அதுமட்டுமின்றி தமிழ் படங்களை வேறு மொழி படங்களோடு ஒப்பிட்டு பேசுவது தவறான விஷயம். நான் எந்த ஒரு மொழியையும் உயர்வாக பேசவில்லை. இருப்பினும் திரைப்படம் என்பது அனைத்து மொழிகளிலும் பொதுவானது.
இந்திய மொழியில் அதிகமாக தமிழ் படங்களை தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இந்தியாவில் இன்று வரை தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது. ஒரு கன்னடப் படம் வெற்றி பெற்றவுடன் தமிழ் சினிமாவையும், இயக்குனர்களையும் திறமையற்றவர்களாக விமர்சனம் செய்வது தவறானது. எனவே கன்னட மொழி படம் நன்றாக இருந்தால் அதை அனைவரும் பார்ப்போம். அதற்காக கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்வோம். நாம் எல்லோருமே தமிழர்கள். தமிழுக்கு ரசிகர்கள். இவ்வாறாக பேரரசு கூறியுள்ளார்.