ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராணி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ நிலைதடுமாறி ராணியின் மீது பலமாக மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.