உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நேர்காணலின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வருவார் என நான் நினைக்கிறேன். இருப்பினும் அது அவருடைய பாதுகாப்பு நிலைமை மற்றும் சுய முடிவை பொறுத்தது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் ஜோ பைடனிடம் உக்ரைன் செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு உக்ரைன் பயணம் சிக்கலான பாதுகாப்பு சவால்களை முன்வைக்கும். எனவே அவருக்கு பதிலாக உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவரை உக்ரைனுக்கு அனுப்ப விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.