இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் புது திரைப்படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” ஆகும். இதில் நகைசுவை நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் குக்வித் கோமாளி புகழ், சிவாங்கி, டாக்டர் படம் புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பல பேர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளரான சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். அண்மையில் வெளியாகிய இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்த நிலையில் இத்திரைபடத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனராக பிரபு தேவா பணியாற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கென பிரம்மாண்ட செட் அமைத்து சென்னையிலுள்ள ஸ்டூடியோவில் மும்பை நடன கலைஞர்கள் கலந்துகொண்டு கோலகலமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டணியின் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். வில்லு படத்தை அடுத்து 14 ஆண்டுகளுக்கு பின் பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் இந்த பாடலின் வாயிலாக இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.