Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வடிவேல் நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”… வெளியான படத்தின் சூப்பர் அப்டேட்…!!!

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் பிரபுதேவா பாடல் ஒன்றிற்கு நடனம் இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

சினிமா உலகில் பிரபல நடிகரான வடிவேலு இடையில் சில காரணங்களால் நடிக்காமல் இருந்த அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மீண்டும் ரீ-என்ட்ரி  கொடுக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இத்திரைப்படத்தில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றார்கள்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பாக பிரபுதேவாவும் வடிவேலும் இணைந்து நிற்கும் வீடியோ வெளியானது. இது இணையத்தில் வேகமாக வைரல் ஆன நிலையில் லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அதில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் இயக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புடன் படக்குழுவின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.

Categories

Tech |