இயக்குனர் மோகன் ஜி இயக்கும் பகாசூரன் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ருத்ர தாண்டவம், திரௌபதி ஆகிய படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி. இதனை தொடர்ந்து செல்வராகவன் மற்றும் இயக்குனர் மோகன் ஜி கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘பகாசூரன்’.
மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் செல்வராகவன், நடிகர் நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் பகாசூரன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பூஜையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் ‘பகாசூரன்’ படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பித்துள்ளதாக மோகன் ஜி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனுடன் முதல் காட்சியில் நடிகர் நடராஜ் நடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.