டி.ஐ.ஜி. அனிவிஜயாவிற்கு கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக போலீஸ் டி. ஐ.ஜி. அனிவிஜயாவிடம் காவல்துறையினர் அத்துமீறலுக்கு எதிராக கூட்டியக்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குகையநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த 11-ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் அருகே உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த சரத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே சரத்குமாரை தற்கொலைக்கு தூண்டிய மேல்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த சரத்குமாரின் குடும்பத்திற்கும் 3 சென்ட் வீட்டுமனை, 2 ஏக்கர் நிலம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் 1 கோடி ரூபாய் நிவாரணம் ஆகியவை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.