எதிர்பாராத விதமாக கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சாத்தபுத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் டவரில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு தனது காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இவர் பகண்டை கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி மின்கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் மணிகண்டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.