Categories
தேசிய செய்திகள்

2024-ம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற புது வியூகம்….. பிரசாந்த் கிஷோர் ஆலோசனை….!!!!

மேற்கு வங்கம் தமிழகம் டெல்லி என்று பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற தனது வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்தார். இந்நிலையில் டெல்லியில் பிரசாந்த் கிஷோர் மூன்றாவது முறையாக சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெறும் கர்நாடகா,  சண்டிகர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது கூறப்படுகின்றது.

கடந்த நான்கு நாட்களில் பிரசாந்த் கிஷோர் சோனியாகாந்தி சந்திப்பு இது 3-வது முறையாகும். 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணியை பிரசாந்த் கிஷோர் கவனிக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |