Categories
தேசிய செய்திகள்

‘என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்றுவிட்டான்’….. கணவன் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஜன்சத் காவல் நிலையத்தில் ஒருவர் எழுத்துபூர்வமாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது மனைவியை அண்டை வீட்டுக்காரன் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டான் என்று தெரிவித்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞரின் நடவடிக்கை பிடிக்காமல் அவர் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் பக்கத்து வீட்டுக்காரருடன் இணைந்து காவல் நிலையத்தில் மனைவி மீது போலியாக புகார் அளித்துள்ளார். விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்த நிலையில் புகார்தாரர் மற்றும் பக்கத்து வீட்டு நபர் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர். காவல் நிலையத்தில் இளைஞர் அளித்த புகாரில் என் மனைவி அழகாக இருப்பதால் அவரை பக்கத்து வீட்டுக்காரன் ஒரு லட்சத்திற்கு விற்று விட்டான் என்று கூறி இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |