தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று சட்டப் பேரவையில் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
- தொழில்துறையிணை “தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை” என பெயர் மாற்றம் செய்யப்படும்.
- இதையடுத்து ஆண்டொன்றுக்கு முப்பத்தி ஆறு லட்சம் ரூபாய் செலவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக ஆணையரகம் உருவாக்கப்பட்டு மொத்தமாக ஏழு பணியிடங்கள் உருவாக்கப்படும்.
- ஹைட்ரஜனை உற்பத்தி துறையில் பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஹைட்ரஜன் எரிசக்தி கொள்கை வெளியிடப்படும்.
- சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த “எத்தனால் கொள்கை 2022” வெளியிடப்படும்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று 1800 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 3ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் குருபரப்பள்ளி தொழிற் பூங்காக்களில் சுமார் 26 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.
- ஓசூர் மற்றும் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற் பூங்காக்களில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சரக்கு வாகனங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
- ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் உணவகம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
- தஞ்சாவூர் மற்றும் உதக மண்டலத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்துறைப் தொழில் பூங்கா ஒன்று தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலக வீட்டு வசதி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
- தமிழ் நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாட்டில் பெட்டிகளுக்கு சரக்கு போக்குவரத்திற்கான வழித் தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
- வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.
- விமானத்தை இயக்க பயிற்சி தரும் நிறுவனங்களை அமைக்க துணை புரிதல்.
- கோயம்புத்தூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்காக தயாரிப்புக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கான அல்லது ஒன்று 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- பிரத்யேக பாதுகாப்பு பூங்காக்கள் சுமார் 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- கோயம்புத்தூரில் பழைய சரக்கு போக்குவரத்து பூங்கா ஒன்று 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்
- அரியலூர் புதிய சிமெண்ட் ஆலையில் மாற்று எரிபொருள் எரியூட்டும் அமைப்பு ஒன்று முப்பது கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
- மேலும் அரியலூர் சிமெண்ட் ஆலையில் 2.50 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய ஒரு புதிய மூடும் வசதி கொண்ட நிலக்கரி கிடங்கு அமைக்கப்படும்.
- அரியலூர் புதிய சிமெண்ட் ஆலையில் உற்பத்தியாகும் சிமெண்ட்டை பழைய ஆலையில் சிமெண்ட் கொள்கலன்களுக்கு கொண்டு செல்லும் அமைப்பு ஒன்று 3.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
- ஆலங்குளம் சிமெண்ட் ஆலை வளாகத்தில் மணிக்கு என்பது மெட்ரிக் டன் அரவை திறன் கொண்ட ஒரு புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் ஒன்று அதற்குரிய கட்டமைப்பு வசதிகளுடன் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.