கூலித் தொழிலாளியை கொன்று கிணற்றில் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தாத்தையங்கார் பேட்டையில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்துவரும் இவர் ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் சரவணனின் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மர்ம நபர்கள் சரவணை அடித்து கொலை செய்து கிணற்றில் தூக்கி எறிந்தது தெரியவந்திருக்கின்றது. இதனால் தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்தவர்களை தேடி வருகின்றார்கள்.