உக்ரைனில் கொள்ளை, கொலை செய்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் விருதுகளை வழங்கி உள்ளதாக உக்ரைன் எம்.பி குற்றம் சாட்டயுள்ளர்.
ரஷ்யா உக்ரைன் மீது 55வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைனின் கிழக்கே உள்ள டான்பாஸில் தனது இரண்டாம் கட்ட போரை ரஷ்ய படைகள் திங்கட்கிழமை முதல் தொடங்கிய நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கி விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவே புச்சா நகரில் ரஷ்யா வீரர்கள் நடத்திய தாக்குதலில் 400 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதோடு பல பெண்கள் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் ரஷ்ய படைகள் அந்நகரில் இருந்து வெளிவருவதற்கு முன்னர் பல பொருட்களை கொள்ளையடித்தும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புச்சா தாக்குதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்களுக்கு விருதுகள் மற்றும் வெகுமதியை வாரி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இணையதள பக்கத்தில் உக்ரைன் எம்பி லிசியா வசிலிங்கோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “புச்சா நகரின் சண்டையிட்ட ரஷ்ய படையினருக்கு புதின் பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கியுள்ளார். அந்நகரில் குழந்தைகளை கொன்றவர்கள், துஷ்பிரயோகம் செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள் ஆகிய போர் குற்றங்களை செய்பவர்களுக்கு வெகுமதி வழங்கியுள்ளார். இந்த சம்பவங்களை உலக அளவில் கண்டிப்பதற்கு பதிலாக உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகளை இனப்படுகொலை என அழைப்பது சரியா தவறா என்ற விவாதம் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்