Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில்….. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுர் அருகே புகழ்பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் திருவிழாவை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் சேர்ந்து  நடத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பிறகு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |