Categories
கிரிக்கெட் விளையாட்டு

டு பிளெசிஸ் அதிரடி ஆட்டம்…. 181 ரன்கள் குவித்த பெங்களூரு அணி…..!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 25-வது நாளான இன்று 31 வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டு பிளேசிஸ் களமிறங்கினார்கள். அனுஜ் ராவத் 4 ரன்களில் வெளியேற அடுத்த பந்திலே விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் டூ பிளேசிஸ் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து சிறிது அதிரடி காட்டினார்.  11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவர் வெளியேற்றினார். அவரை தொடர்ந்து பிரபுதேசாய் களமிறங்கினார். அவர் குருனால் பாண்டியா பந்துவீச்சில் 10 ரன்களில் வெளியேறினார். இதனால் பெங்களூரு அணி 64 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.

Categories

Tech |