Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 20…!!

ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 111 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார்.

1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.

1689 – பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார்.

1770 – ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் எரிக்கிலி உதுமானியப் படைகளை ஆசுபின்சா போரில் தோற்கடித்தார்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.

1792 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு அங்கேரி, பொகிமியா மன்னர் மீது போர் தொடுத்தது.

1810 – வெனிசுவேலாவின் கரகஸ் ஆளுநர் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தார்.

1862 – லூயி பாஸ்ச்சர், கிளவுட் பெர்னாட் ஆகியோர் தன்னிச்சைப் பிறப்பாக்கம் என்ற கொள்கையை நிராகரிக்கும் பரிசோதனைகளை செய்து முடித்தனர்.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி எசுப்பானியா மீது போரை அறிவிக்கும் அறிவித்தலுக்கு ஒப்புதல் அளித்தார்.

1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர்.

1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

1922 – சோவியத் அரசு தெற்கு ஒசேத்திய தன்னாட்சி வட்டாரத்தை ஜோர்ஜிய சோவியத் சோசலிசக் குடியரசில் அமைத்தது.

1939 – இட்லரின் 50வது பிறந்தநாள் செருமனியில் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது.

1945 – வடக்கு செருமனியில் நியூரென்காம் வதை முகாமில் மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 20 யூத சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனியின் லைப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்குக் கையளித்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லைப்சிக் நகர முதல்வர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.

1945 – இட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.

1946 – உலக நாடுகள் சங்கம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு வழங்கப்பட்டன.

1961 – பனிப்போர்: கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பன்றிகள் விரிகுடா படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.

1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் உயிரிழந்தனர்.

1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் உயிரிழந்தனர்.

1972 – அப்பல்லோ திட்டம்: யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.

1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.

1998 – கொலம்பியாவில் பொகோட்டா நகரில் ஏர் பிரான்சு போயிங் விமானம் மலை ஒன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 53 பேரும் உயிரிழந்தனர்.

1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.

1999 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – அமெரிக்காவின் இயூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.

2012 – பாக்கித்தான், இஸ்லாமாபாத் நகரில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் குடிமனைகள் உள்ள பகுதியில் விமானம் வீழ்ந்ததில் 127 பேர் உயிரிழந்தனர்.

2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2015 – சோமாலியா, புந்துலாந்து பகுதியில் ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்.

இன்றைய தின பிறப்புகள்

1586 – லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)

1808 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரான்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1873)

1889 – இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)

1893 – ஹரோல்ட் லாயிட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 1971)

1904 – கே. சுப்பிரமணியம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் (இ. 1971)

1908 – பழனி சுப்பிரமணிய பிள்ளை, தமிழக மிருதங்க கலைஞர் (இ. 1962)

1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 2006)

1923 – சாரணபாசுகரன், தமிழகக் கவிஞர், இதழாளர் (இ. 1986)

1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)

1939 – குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வேயின் 22வது பிரதமர்

1942 – இலந்தை சு. இராமசாமி, தமிழகக் கவிஞர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர்

1945 – தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்

1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி

1950 – நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் 13வது முதலமைச்சர்

1972 – கார்மென் எலக்ட்ரா, அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்

1248 – குயுக் கான், மங்கோலியப் [[ககான்|பேரரசர் (பி. 1206)

1786 – ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1764)

1918 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1850)

1955 – திருக்கண்ணபுரம் விஜயராகவன், தமிழகக் கணிதவியலாளர் (பி. 1902)

1980 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)

2000 – பிலிப் சைல்ட்சு கீனான், அமெரிக்க வானியலாளர், கதிர்நிரலியலாளர் (பி. 1908)

2004 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1948)

2008 – மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம், இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)

2011 – ர. சு. நல்லபெருமாள், தமிழக எழுத்தாளர்

2012 – சண்முகம் சிவலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1936)

2019 – எஸ். முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர் (பொ. 1930)

இன்றைய தின சிறப்பு நாள்

ஐநா சீன மொழி நாள் (ஐநா)

Categories

Tech |