Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. தனியார் பள்ளிகளில் இன்று(20.4.22) முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

மாணவர்கள் அனைவரும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்விக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் இலவசம் என்ற திட்டத்தின் கீழ் என்ற அரசின் https://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கம் மூலம் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |