Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“துவரங்குறிச்சி அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு”… காளைகள் முட்டியதில் 25 வீரர்கள் காயம்…!!!

துவரங்குறிச்சி அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 25 வீரர்களை காளைகள் முட்டியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அடுத்த கரடிப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதைத்தொடர்ந்து உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 655 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்றார்கள். இதில் சில காளைகள் தன்னை பிடிக்க முயன்ற வீரர்களை முட்டியது.

இதனால் 25 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் பலத்த காயம் அடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். வெற்றிபெற்ற வீரர்களுக்கும் வீரர்களால் அடக்கமுடியாத காளைகளுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், அண்டா, சார், துண்டு உள்ளிட்டவை பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டது. இதில் இரண்டு காளைகள் கயிறு போடும் இடம் அருகில் இருக்கும் கிணற்றில் விழுந்ததைத்தொடர்ந்து பணியில் இருந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக காளைகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |