Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு… போலீஸார் வலைவீச்சு…!!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் அருகே இருக்கும் ஊட்டத்தூர் அம்மன் காலனியில் வசித்து வந்தவர் 24 வயதுடைய சிவகுமார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் ஊட்டத்தூரிலிருந்து பி.கே.அகரம் நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து சிறுகனுர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தை தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |