குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.முறைகேடு நடந்த 2 தேர்வு மையத்திற்கு சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
நேற்று 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூன்று பேரை கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக டிபிஐ அலுவலக உதவியாளர் ரமேஷ் , குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும் திருக்குமரன், நிதீஷ் குமார் ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு வருகின்ற 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் CBCID போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் திருக்குமரன் ஒரு முக்கிய நபராக தான் பார்க்கப் படுகிறார். அதேபோல ஆவணங்களை கைப்பற்றும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். திருக்குமரன் தந்தையிடம் இரவு முழுவதும் CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டு குரூப்-2 ஏ தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இது மட்டுமில்லாமல் இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகள் யார் யார் இருக்கின்றார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிகிறது.