சோதனை சாவடி அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருச்சி கரூர் இடையான பைபாஸ் சாலையில் உள்ள சோதனைச்சாவடி எண் 7 அருகிலிருக்கும் உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழ் நேற்று முன்தினம் காலையில் 50 வயது உள்ள பெண்ணின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளது.
இதுபற்றி மலைக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் திருச்சி உறையூரில் உள்ள வெட்டும்புலி சந்தையை சார்ந்த முகமது ரபிக் என்பவரின் மனைவி மும்தாஜ் பேகம் என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்ற 13ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இந்நிலையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டு இருக்கின்றார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.