மத்திய அரசின் தேசிய பென்சன் திட்டம் 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட யாராக இருந்தாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் கொடுப்பது மட்டுமல்லாமல் வருமான வரிச் சலுகைகளையும் தருகிறது. இது மத்திய அரசின் திட்டம் என்பதன் காரணமாக இதில் கூடுதல் நன்மைகள் உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது முதலீடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ரிட்டயர்மென்ட் வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். முதல் 60 சதவீதம் தொகையை எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 40% மூலம் வருமானம் வரும். இந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் உங்களுடைய அக்கௌண்டில் எவ்வளவு தொகை மீதம் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம்.
NSDL இணையதளத்துக்கு (https://nsdl.co.in/) செல்லவும்.
அங்கு பிரான் நம்பரை பயன்படுத்தி log in செய்யவும்.
Transaction Statement பகுதிக்கு கீழ் உள்ள Holding Statement என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது, நீங்கள் இதுவரை சேர்த்து வைத்துள்ள மொத்த பணமும் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.