ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நடுவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பதும், மயிலாடுதுறையில் இருந்து கீழ்வேளூர் நோக்கி சென்ற ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.