தற்போதைய காலகட்டத்தில் நாம் எது செய்ய வேண்டுமானாலும் கட்டாயம் மொபைல் எண் தேவைப்படுகிறது. அவ்வாறு மொபைல் எண்ணை பதிவு செய்யும்போது நம் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உறுதி செய்த பிறகே எந்த பரிவர்த்தனையும் நாம் செய்ய முடியும். ஓடிபி எதற்காக என்றால் நம்முடைய மொபைல் எண்ணை வேறு யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு கணினி அமைப்பு அல்லது பிறவற்றில் உள்ள உள்நுழைவு அமர்வு அல்லது பரிவர்த்தனைக்கு மட்டுமே செல்லுபடியாகும் கடவுச்சொல் ஆகும். இது டிஜிட்டல் சாதனம். பரிவர்த்தனைகளுக்கு பயன்படுகிறது. அவ்வாறு நாம் தினந்தோறும் பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்வோம். நம்முடைய மொபைலுக்கும் கட்டாயம் நாளொன்றுக்கு ஒரு ஓடிபி-யாவது வந்துவிடும். அப்படி வரும் ஓடிபி நமது மொபைலில் அப்படியே இருக்கும்.
நாமும் அதை கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் அதன் மூலமாகவும் மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் நாள்தோறும் வளர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட மோசடிகளில் ஒன்றுதான் ஓடிபி. நம் மொபைலில் அப்படியே இருக்கும் ஓடிபி மூலம் ஹேக்கர்கள் நமது வங்கிக் கணக்கை திருட இயலும். எனவே ஓடிபி வந்த எஸ்எம்எஸ்-ஐ நீங்கள் டெலீட் செய்வது நல்லது. அது அவ்வளவு சிரமம் ஒன்றும் கிடையாது.
அதற்கு மொபைலில் ஒரு ஆப்ஷன் உள்ளது. 24 மணி நேரத்தில் தானாகவே ஓடிபி எஸ்எம்எஸ் அழிந்துவிடும் ஆப்ஷன் ஒன்று உள்ளது. மெசேஜ் ஆப்பில் மேலே இருக்கும் 3 dots- ஐ கிளிக் செய்து settings உள்ளே சென்றால் message organisation என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே சென்றால் automatic delete OTP after 24 hours என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும், உங்களுக்கு வரும் ஓடிபி எஸ்எம்எஸ் 24 மணி நேரத்தில் தானாகவே அழிந்துவிடும். இதன் மூலமாக எவ்வித மோசடி சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க லாம்.