தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அபபோது பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்து, உதயநிதியின் கார் தன்னுடைய கார் என்று நினைத்து அதில் ஏற முயன்றார். அப்போது அவரது பாதுகாவலர்கள் இது நம்ம காரி இல்லை என்று கூற அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, “ஓ அந்த வண்டியா, ஓ சரி”என்று கூறிவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டார்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ், அணைக்கட்டுநந்தகுமார் ஆகியோர் உடன் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே வந்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மூன்று நாட்களுக்கு முன்னர் நானும் தவறுதலாக ஈபிஎஸ் காரில் ஏற பார்த்தேன், அதன்பின் பார்த்தால் அதில் ஜெயலலிதா படம் இருந்தது என கூறினார்”.