ரயிலில் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையப்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவரான கமலதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தஞ்சாவூருக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கமலதாசன் ரயிலில் திடீரென துங்கியுள்ளார். அப்போது ரயிலில் இருந்த வாலிபர் ஒருவர் கமலதாசனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை திருட முயன்றுயுள்ளார்.
இதனை பார்த்த பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கும்பகோணம் ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தர்மதுரை என்பது தெரியவந்துள்ளது.