இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டுமாக வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடம் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 59 % அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 2,838 விமானங்கள் இயக்கப்பட்டது. இதன் வாயிலாக சுமார் 4 லட்சத்து 7 ஆயிரத்து 975 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு பின் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி இருப்பதாக விமான போக்குவரத்துதுறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.