Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவர்களுடன் உணவருந்திய கலெக்டர்….. விடுதி காப்பாளருக்கு கடும் எச்சரிக்கை….!!

ஆதி திராவிடர் மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதை கேட்டறிந்தார். இவர்  மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார்.

அதன்பின் அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் மாணவர்களுக்கு சரியான முறையில் தரமான உணவு வழங்க வேண்டுமென கூறினார். மேலும் முறைகேடு செய்யும் விடுதி காப்பாளர் மற்றும் சமையலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி உள்பட சில அதிகாரிகள் உடனிருந்தனர்.

Categories

Tech |