தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் தேர்ச்சி என அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே மாதம் நடைபெற உள்ள 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.