Categories
மாநில செய்திகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி…. 4 வயது சிறுவனுடன் அகதியாக தமிழகம் வந்த பெண்……!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திணறுகின்றனர். இதனை வாங்க பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அத்துடன் மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்டநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு சிறுமி, 4 வயது சிறுவனுடன் ஒரு பெண் அகதியாக தனுஷ்கோடி வந்துள்ளார். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு பின் பெரும்பாலான அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |