லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த கைதி திரைப்படம் இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. முன்னணி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கார்த்தி நடித்த டில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் தர்மேந்திரா ஷர்மா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு போலா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ADF ஃபிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்மெண்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடிகை தபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி போலா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.