மறைந்த மருத்துவ பேராசிரியர் திரு.எம். நஞ்சுண்டராவ் அறக்கட்டளை சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் சுதா சேஷய்யன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, பேராசிரியர் ஆர். நஞ்சுண்டராவ் மருத்துவத் துறையில் செய்த சேவைகள் அளப்பரியது. அவர் சுமார் 33 ஆண்டுகளாக சென்னை மருத்துவக் கல்லூரியில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி பல்வேறு மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். இதற்கு அவர் ஊதியமாக ஒரு பைசா கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய தாத்தா பெயரும் நஞ்சுண்டராவ் தான் அவரும் ஒரு மருத்துவர் ஆவார். சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஆங்கிலேயர்களால் மகாகவி பாரதியாருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அவரை பத்திரமாக பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தவர் இவர்தான். இவ்வாறான பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்துவந்த டாக்டர் நஞ்சுண்டராவ் மருத்துவத்துறையில் செய்த சேவைகள் எண்ணில் அடங்காதவை இதுபோன்ற செய்திகள் தான் இப்போது தேவை என அவர் கூறினார்.