Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒற்றுமையாக சேர்ந்து செயல்படுவோம்….. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம்….. மாவட்ட ஆட்சியர் அறிவுரை….!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி தலைவர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசினார். அவர் பிளாஸ்டிக் பொருட்களை அனைவரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பையை பயன்படுத்திட வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகளை நகராட்சி ஆணையர்கள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

அதன்பிறகு அனைத்து வணிக நிறுவனங்களின் முன்பாகவும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விளம்பர பலகையை வைக்க வேண்டும். இதனையடுத்து துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும், நகராட்சி ஆணையர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Categories

Tech |