Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு நாள் இவர் இந்திய அணிக்கு விளையாடுவார்…. ஐதராபாத் வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்…!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து இவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐதராபாத் அணியின் வீரர் உம்ரான் மாலிக் தனது வேகத்தாலும் பந்துவீச்சு நுணுக்கத்திலும் அனைவரையும் கவர்ந்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் நிச்சயமாக அவர் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று பாராட்டியுள்ளார்.

Categories

Tech |