2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பகோரிக்கை வலுத்துள்ள நிலையில், கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.
Categories