உக்ரைனின் இர்பின் நகரின் புதிய கல்லறையில் கொத்துக் கொத்தாக சடலங்கள் அருகருகே புதைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இரு தரப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பல பெண்கள், சிறுமிகள் ரஷ்யர்களால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இர்பின் நகரில் உள்ள கல்லறையில் கொத்துக்கொத்தாக சடலங்கள் அறிகுறிகள் புதைக்கப்பட்டு இருக்கின்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேலும் புதைக்கப்பட்ட இடத்திற்கு மேல் மலர்வளையங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அதில் ஒரு கல்லறை மீது மட்டும் கொல்லப்பட்ட ஒருவரின் முகம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு கல்லறையில் இருந்து அவர் வெளியே பார்ப்பது போல் அமைந்திருக்கிறது. இந்த வீடியோவைஉக்ரேனிய எம்.பி லிசியா வெளியிட்டிருக்கிறார்.
I’ve seen this footage of #Irpin new cemetery too many times and still feel sick to the core at the hundreds of young lives lost in a single moment. #StopUkraineGenocide pic.twitter.com/laoBI4vHNA
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 19, 2022
அந்த பதிவில், இர்பின் புதிய கல்லறையின் காட்சிகள் இவை, இதை நான் பலமுறை பார்த்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரே கணத்தில் இவ்வளவு உயிர்கள் பறிபோய் விட்டதே என நினைக்க தோன்றுகின்றது. அதனால் இனப்படுகொலையை நிறுத்துங்கள் என பதிவிட்டிருக்கிறார்.