சிவகங்கை மாவட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென விருப்பப்பட்டால் அது ஜனநாயகம் முறையில் இருத்தல் வேண்டும். ஆனால் அவரது பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்து இருந்தால் அது கண்டனத்துக்குரியது ஆகும்.
இச்சம்பவத்தை தமிழ்நாட்டில் பாஜக. மாநில தலைவர் அண்ணாமலை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல. திமுக, காங்கிரஸ் கட்சிக்கு இடையில் உள்ள தேர்தல் உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.