Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தி… “விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்”… தரிசனம் செய்த மக்கள்…!!

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இந்த விழாவை ஒட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதை போல மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், கடைவீதி பாலகணேசர்  கோவில், ஆனைமலை, கோட்டூர், சுல்தான்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கட சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |