Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் தாக்கப்படுவதற்கு முன்…. வானில் பறந்த அமெரிக்க விமானம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஷ்யாவின் கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு முன்பாக வானத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற கப்பலை உக்ரைன் படைகள் தாக்கியது. இதில் கப்பல் மூழ்கடிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய அரசு, முதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் தான் கப்பல் மூழ்கியது என்று கூறியிருந்தது. அதன் பிறகு உக்ரைன் தாக்கியதை ஒப்புக்கொண்டது.

இதற்கிடையில், இக்கப்பல் தாக்கப்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பாக கருங்கடல் பகுதியில் வானத்தில் அமெரிக்க கடற்படைக்குரிய P-8 Poseidon aircraft என்ற கண்காணிப்பு விமானம் வானத்தில் பறந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த விமானம் பறந்த பின்பு தான் மாஸ்க்வா கப்பல் தாக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, அந்த அமெரிக்க விமானம் மாஸ்க்வா கப்பலை ட்ராக் செய்து அது இருக்கும் இடத்தை துல்லியமாக உக்ரைன் படைக்கு தெரியப்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்க கடற்படை மறுத்திருக்கிறது.

Categories

Tech |