Categories
உலக செய்திகள்

“காசா நகரில் ராணுவ வான்தாக்குதல்”… நடத்தியது யார்?…. லீக்கான தகவல்…..!!!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் நீண்டகாலமாகவே எல்லை பிரச்சினையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசாநகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் இராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அண்மை நாட்களாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெரு சலேம் நகரில் இஸ்ரேல் காவல்துறையினரும், பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக ஜெரு சலேம் நகரிலுள்ள அல் அக்சா மசூதிக்கு அருகே நடைபெற்ற மோதலில் சுமார் 500 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் காவல்துறையினரின் இந்த வன்முறையை கண்டித்து ஹமாஸ் போராளிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ராக்கெட் ஒன்றை வீசினர். எனினும், இஸ்ரேலில் வான் பாதுகாப்பு அமைப்பு ராக்கெட்டை நடுவானிலேயே இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ராக்கெட்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாநகர் மீது வான்தாக்குதல் நடத்தியதாகவும் ராணுவம் தெரிவித்தது. இதில் காசாவில் ஹமாஸ் போராளிகளின் ஆயுத உற்பத்தி தளத்தை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த வான் தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்  தொடர்பாக தகவல்கள் இல்லை.

Categories

Tech |