Categories
சினிமா

“நான் எப்போதுமே நடிகர் தான்”…. இயக்குனர் பாக்யராஜ் அதிரடி பேச்சு……!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ் 21 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “3.6.9” ஆகும். இந்த படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கி இருக்கிறார். உலக கின்னஸ்சாதனை படைக்கும் வகையில் இந்த படம் நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 24 கேமராக்களில் ஒளிப்பதிவுசெய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள, 75-க்கும் அதிகமான நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றபோது, படக்குழுவினருடன் பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடிகர் பாக்யராஜ் பேசியதாவது,” 21 வருடம் ஆயிட்டு என்று கூறி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். இதில் படத்தில் ஸ்கீரினில் வர்றவன் மட்டும்தான் ஹீரோவா, கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா. நான் அவ்வப்போது நடித்து கொண்டு தான் இருக்கிறேன். இதனால் நான் எப்போதுமே ஹீரோதான். இங்கு இயக்குனர் என்னை படைத்த அப்பா, அம்மாவுக்கு என தொடங்கியது எனக்கு பிடித்து இருந்தது. நான் இதுவரையிலும் கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இப்படம் தான் முதல் முறை ஆகும். இந்த படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள்.
இவர்கள் திட்டமிட்டது அனைத்தும் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம்தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தார்கள். இதற்கிடையில் யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று அச்சமாக இருந்தது. எனினும் இவர்கள் 1 மாத ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். எனவே மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தில் நான் மறந்துவிடுவேன் என பாண்டி எனக்கு டயலாக் சொல்லி அசத்தினார். ஆகவே அனைவரும் சிறந்த முறையில் நடித்து படத்தை எடுத்து விட்டார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. நன்றி..” என்று பேசினார்.

Categories

Tech |