உக்ரைனின் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக், கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு விட்டதாக லுஹான்ஸ்க் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் கூறியுள்ளார். ரஷ்யா ஆதரவு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-கை உக்ரைனிய நாட்டில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து தொடங்கப்பட்ட போர் தாக்குதலை ரஷ்யா 55 நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவால் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. உக்ரைனின் கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யாவால் சுகந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியின் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் கூறியுள்ளார்.
மேலும் கொல்லப்பட்ட பிரிவினைவாத ராணுவத்தளபதி மிகைல் கிஷ்சிக் மற்றும் அவரது படைத்துருப்புகள் உக்ரைனில் தாக்குதல் நடத்திய போது தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் மிகைல் கிஷ்சிக் என்ற பெயரை விட மிஷா செச்சென் என்ற பெயரால் நன்கு அறியப்படும் நபர் என தெரியவந்திருக்கிறது.