மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாதர் சங்கம், விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.