புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, புழுதிவாக்கம் மண்டல அலுவலகத்தில் உள்ள 187-வது வரிவிதிப்பாளர் மற்றும் வசூலிப்பாளர் சென்னை மாநகராட்சி பெருங்குடியில் 14-ஆவது மண்டலம் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சொத்து வரி போட ரூ 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்கள். அதற்கு வீட்டின் உரிமையாளர் ரூ 14 ஆயிரம் தருவதாக பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் தர விருப்பமில்லாமல் அவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு லவக்குமார், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கொண்ட தனிப்படையினர் ரசாயனம் தடவிய ரூ 14,000 -த்தை அவரிடம் கொடுத்து கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் புழுதிவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு சென்று வரி வசூலிப்பாளர் ராஜாராமன் (40) என்பவரிடம் ரூ14,000 கொடுத்தபோது மாறுவேடத்தில் மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக அவரை மடக்கி பிடித்து கைதுசெய்துள்ளனர். மேலும் வரி விதிப்பாளரை தேடி வருகின்றனர்.